ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி

🕔 April 20, 2023

வதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி, இந்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று (20) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி விசாரித்தபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து கொண்ட நீதிமன்றம், அதன் தீர்ப்பை ஏப்ரல் 20-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக கூறியிருந்தது.

அதன்படி இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ராகுலின் மனுவை தள்ளுபடி செய்வதற்கான பல்வேறு காரணங்களை நீதிமன்றம் கூறியுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அடுத்து தங்களுக்குள்ள சட்ட வாய்ப்புகளை பயன்படுத்துவோம் என்று, காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

“இதேவேளை இன்றைய நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தவறானது,” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

இதேவேளை,‘’தண்டனை மீதான மேல்முறையீடு முடிவடையும் வரை, ராகுல் காந்தி பிணையில் இருப்பார், இந்த அவதூறு வழக்கில் அவர் கைது செய்யப்பட மாட்டார்’’ என்று ராகுல் காந்தியின் சட்டத்தரணி கூறினார்.

தொடர்பான செய்தி: இந்தியப் பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்