இலங்கையின் முதலாவது ‘ஆத்திர அறை’ பத்தரமுல்லையில்

இலங்கையின் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை (Rage Room) அமைக்கப்பட்டுள்ளது.
இது பத்தரமுல்ல – கொஸ்வத்தையில் திறக்கப்பட்டுள்ளது.
‘ஆத்திர அறை’ (Rage Room) வளர்ச்சியடைந்த நாடுகளில் நன்கு அறியப்பட்ட போதிலும், இலங்கைக்கு இது புதியதாகும்.
ஆத்திர அறைகள் ஒருவரின் விரக்தியை வெளிப்படுத்த, வேடிக்கையான மற்றும் பொழுதுபோக்கு வழிகளை வழங்குகின்றன.
நபர்கள் இங்கு வந்து – ஒரு பொருளை தேர்ந்தெடுத்து அதனை அடித்து நொறுக்கலாம் என்று, பத்தரமுல்லயில் அமையப்பெற்றுள்ள ‘ஆத்திர அறை’ (Rage Room) ஸ்தாபகரான ஷவீன் பெரேரா கூறுகிறார்.
அங்கு வரும் ஒவ்வொருவரும் தமது மன அழுத்தத்தை முறியடித்து, புதியவராக வெளியேறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆத்திர அறைகள் வன்முறையைத் தூண்டுகின்றன என்ற கருத்து தவறானதாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஷவீன், சிந்தனையில் இலங்கை பின்தங்கிய நிலையில் இருப்பதே, இவ்வாறான கருத்துகள் வெளிப்படுவதற்குக் காரணமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மிகவும் பின்தங்கிய சிந்தனையில் உள்ளமையே இதற்கான காரணமாகும் என்றும் ஷவீன் பெரேரா தெரிவித்துள்ளார்.