உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

🕔 March 14, 2023

ள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 09ஆம் திகதி நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றில் இன்று (14) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் செயலாளர், விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், அரச அச்சகர், பொலிஸ் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பிரதம மந்திரி உட்பட அமைச்சரவையின் 35 உறுப்பினர்களும், இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்