உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்த எலோன் மஸ்க், அதிக ‘நஷ்டத்தை சந்தித்தவர்’ எனும் கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்

🕔 January 17, 2023

லக பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்த எலோன் மஸ்க், வரலாற்றில் மிகப்பெரிய தனிப்பட்ட செல்வத்தை இழந்தமையினால், அது உலக சாதனையாகி உள்ளது.

நொவம்பர் 2021 முதல் டிசம்பர் 2022 வரை அவர் சுமார் 165 பில்லியன் டொலர்களை (இலங்கை மதிப்பில் 60 லட்சத்து 43 அயிரத்து 721 கோடி ரூபா) இழந்தார் என்று – கின்னஸ் உலக சாதனைகள் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் ஃபோர்ப்ஸ் வெளியீட்டாளரின் தரவை அடிப்படையாகக் கொண்டவை எனவும், ஆனால் மற்றைய ஆதாரங்களின் அடிப்படையில் மஸ்கின் இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று கின்னஸ் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு எலோன் மஸ்க் – ட்விட்டரை வாங்கியமையை அடுத்து, அவரின் மின்சார கார் நிறுவனமான ‘டெஸ்லா’வின் பங்குகளின் மதிப்பு சரிந்தது.

அவர் ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கையகப்படுத்தியதை அடுத்து, அவரின் மற்றைய நிறுவனமான டெஸ்லா தொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற கவலைமுதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டது.

ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டாளர் ‘மசயோஷி சன்’ சந்தித்த 58.6 பில்லியன் டொலர் எனும் இழப்பை விடவும், நொவம்பர் 2021 முதல் எலோன் மஸ்க் சந்தித்த இழப்புகள் அதிகமாகும். அந்த வகையிலேயே, அவரின் பெயர் கின்னஸில இடம்பிடித்துள்ளது.

மதிப்பிடப்பட்ட இழப்பு – அவருடைய பங்குகளின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும், அந்தப் பங்குகளின் பெறுமதி அதிகரிக்கும் போது, அவர் இழந்தவற்றை மீண்டும் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது..

லூயிஸ் உய்ட்டன் என்ற ஃபேஷன் லேபிளை வைத்திருக்கும் பிரெஞ்சு ஆடம்பரப் பொருட்கள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பெர்னார்ட் அர்னால்ட்டிடம் உலகின் பணக்காரர் என்ற அடையாளத்தை எலோன் மஸ்க் இழந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்