தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்பது தொடர்பில் மாறுபட்ட அறிவிப்புகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் அனைத்து மாவட்ட பிரதி/ உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கட்டுப்பணத்தை மறு அறிவித்தல் வரை ஏற்க வேண்டாம் என, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன அறிவித்திருந்தார்.

இருந்தபோதும். பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன விடுத்திருந்த அறிவிப்பை, வாபஸ் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.