
பொருளாதார நெருக்கடி காரணமாக திறைசேரிக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக – அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (10) தெரிவித்துள்ளார்.
“நாங்கள் எதிர்பார்த்ததை விட திறைசேரி கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது” என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தை குறைக்குமாறு, அமைச்சரவைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.
“சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதில் ஒன்று அல்லது 2 வாரங்கள் தாமதம் ஏற்படலாம்” என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.



