பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசை விற்றவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதையேற்றக் கூடிய பரிந்துரைக்கப்படாத குளிசைகளை விநியோகித்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளத்துக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் 150 மில்லிகிராம் அளவினைக் கொண்ட 539 குளிசைகளை வைத்திருந்தார்.
வவுனியாவைச் சேர்ந்த சந்தேக நபர் நீண்டகாலமாக சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வலி நிவாரணியாக குறித்த குளிசை – மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்ற போதும், அதனை போதைக்காக அதிகளவில் சிலர் எடுத்துக் கொள்கின்றனர்.