
பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை, பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நாடாளுமன்ற பிரிவில் பணியாற்றி வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என, கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவிடம் நேற்று (13) சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 29 ஆம் திகதி பெண் பொலிஸ் கொன்ஸ்டபில் கடைமைக்கு வந்திருந்த போது – குறித்த பொலிஸ் சார்ஜன்ட், பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் தலையைப் பிடித்து இழுத்து, அவரைத் தன் பக்கம் திருப்பி நெற்றியில் முத்தமிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த பெண் கொன்ஸ்டபில் தெரிவித்துள்ளார்.



