கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வெகுமதி: 05 ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்கள் திருக்கோவிலில் வழங்கி வைப்பு

🕔 September 30, 2022

த்துணவுகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 05 ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்களை வழங்கும் நிகழ்வு நேற்று (29) திருக்கோவிலில் இடம்பெற்றது.

வரையறுக்கப்பட்ட ‘செஜய’ மைக்றோ கிரடிட்நிறுவனம், தனது நிதி அனுசணையாளரான ஜப்பானில் உள்ளபு ‘கோஜோ’ (GOJO) அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்புடன் இலங்கையில் 7400க்கும் மேற்ப்பட்டகர்ப்பிணிகளுக்கு – ‘தாய்மைக்கான வெகுமதி’ எனும் பெயரில், 5000 ரூபா பெறுமதியான வவுச்சர்களை வழங்கி வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சுமார் 175 கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வவுச்சர்கள் நேற்று (29) விநியோகிக்கப்பட்டன.

திருக்கோவில் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வினை, சேஜய நிறுவனத்தின் திருக்கோயில் கிளையின் முகாமையாளர் க. செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் திருக்கோவில் பிரதேசசபையின் தவிசாளர் சு.று. கமலராஜன், திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் மு. சதிசேகரன், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பி. மோகனகாந்தன் மற்றும் சேஜய நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஏ. சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வவுச்சர்களையும் வழங்கி வைத்தனர்.

Comments