நாடாளுமன்றில் வெளிப்படுத்திய வரி மோசடி தொடர்பில் முழுமையான அறிக்கை: மூன்று வாரங்களுக்குள் வெளியிட நிதியமைச்சு தீர்மானம்

🕔 September 26, 2022

நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட வரி மோசடிகள் தொடர்பான முழுமையான அறிக்கையை – மூன்று வாரங்களுக்குள் சபையில் சமர்ப்பிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை சுங்கம், கலால் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று (26) இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

நாட்டில் 59,000 வருமான வரி செலுத்துவோர் இருப்பதாகவும், சுமார் 80 பேர் மட்டுமே 10 மில்லியனுக்கும் அதிகமான வருமான வரி செலுத்துவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் கூறியிருந்தார்.

28,000 வரி செலுத்துவோர் 10 மில்லியனுக்கும் குறைவாக செலுத்துவதாகவும் இதன்போது தெரியவந்தது.

எனவே வரி மோசடிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, வரி வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

2.5 மில்லியன் புதிய வரி செலுத்துவோரை உள்வாங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்