
– பாறுக் ஷிஹான் –
ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை நிந்தவூர் – செயின் வீதி சந்தியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் நிந்தவூர் 09ஆம் பிரிவைச் சேரந்த18 வயது மதிக்கத்தக்கவராவார்.
சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 4.2 கிராம், சந்தேக நபர் செலுத்தி வந்த ஹொன்டா ரக மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு தொகப் பணம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையினை கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம். டயஸ் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் சான்றுப் பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினர் பாரப்படுத்தினர்.




