மருத்துவ கஞ்சாவை ஏற்றுமதி செய்வது சட்டபூர்வமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் சிசிர

🕔 September 23, 2022

ருத்துவ கஞ்சாவை ஏற்றுமதி செய்வது சட்டபூர்வமாக்கப்படும் என சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்ட ஆவணங்களை தயாரிக்குமாறு ராஜாங்க அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுதேச மருந்து ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு பொருத்தமான சூழலை உருவாக்க, தற்போதுள்ள சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மருத்துவ கஞ்சாவுக்கு உலகளவில் பெரும் தேவை இருப்பதாக ஜெயக்கொடி சுட்டிக்காட்டினார்.

மருத்துவ கஞ்சா ஏற்றுமதியை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஏனையவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments