சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்புகள்: ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை சபாநாயகர் அறிவித்தார்

🕔 September 22, 2022

ர்வதேச நாணய நிதியத்துடனான (ஐஎம்எப்) பணியாளர் மட்ட ஒப்பந்தம் – இறுதி ஒப்பந்தம் அல்ல என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் நாடாமன்றத்தில் கூறினார்.

ஜனாதிபதி அறிவித்ததன் பிரகாரம், சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் நிலை ஒப்பந்தம் குறித்து – அமைச்சரவைக்கு இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.

எதிர்க்கட்சியினரும் மற்றும் ஆர்வமுள்ள ஏனைய தரப்பினரும் விரைவில் அமைச்சரவையுடன் கூடிய விளக்கமளித்தலுக்கு அழைக்கப்படுவர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கலந்துரையாடல்கள் மற்றும் விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடன் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு முன்னதாக, அமைச்சரவை மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு உடன்படிக்கை குறித்து விளக்கமளிக்கப்படும் என சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிடுமாறு, பல எதிர்க்கட்சி எம்.பியினர் அரசாங்கத்தை பலமுறை வலியுறுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது.

Comments