இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் நிரப்பு நிலையங்களை தனியாருக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் கஞ்சன

🕔 September 22, 2022

லங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 1250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தனியாருக்கு வழங்குவதற்கான வேலைதிட்டத்தின் மீளாய்வுக் கூட்டத்தின் போதே அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் நொவம்பர் மாதம் முதல்- குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களைின் கட்டுப்பாட்டினை பெற்றுக்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், எரிபொருளை விநியோகிப்பதற்கும், எரிபொருளை விற்பனை செய்வதற்கும் அதிகாரங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபத்தின் எரிபொருள் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமைய, இதுவரை 24 நிறுவனங்களிடமிருந்து கேள்விப் பத்திரத்துக்கான இணக்க மனு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

Comments