மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் ‘பேட்’களுக்கான வரிகளைக் குறைக்க ஜனாதிபதி இணக்கம்: ராஜாங்க அமைச்சர் கீதா தெரிவிப்பு

🕔 September 21, 2022

பெண்கள் மாவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி பேட்களுக்கான வரியை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று (21) தெரிவித்துள்ளார்.

சானிட்டரி பேட்களுக்கான விலையேற்றம் காரணமாகபெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் பேட்களுக்கான வரிகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்ததாகவும், இதற்கிணங்க அவற்றுக்கான வரிகளைக் குறைக்க ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு 150 ரூபாவுக்கு சானிட்டரி பேட்களை வழங்க உள்ளூர் உற்பத்தியாளர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்