
அமைச்சரவை அமைச்சர்களை அடுத்த கட்டமாக நியமிக்கும் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் கடந்த அமைச்சரவையில் பணியாற்றியவர்களைக் கருத்தில் கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இரண்டு நாடாளுமுன்ற உறுப்பினர்ட அமைச்சரவைியல் இணைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் படி 30 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க முடியும் என்றும் அதற்கிணங்க இன்னும் பத்து அமைச்சர்கள் பதவிகள் காலியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய நியமனங்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அவர் உறுதியாக தெரியவில்லை.



