
இலங்கை வைத்தியர்கள் சுமார் 500 பேர், இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறையில் இது ஒரு மோசமான நிலை என்று சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க கூறியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில்நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியசர்கள் சுகாதார அமைச்சுக்கு தெரிவிக்காமல் சென்றுள்ளனர் எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் 50 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் ஏற்கனவே தமது ராஜினாமாக்களை அனுப்பியுள்ளதாகவும் டொக்டர் சமில் விஜேசிங்க கூறியுள்ளார்.
வைத்தியர்களின் வெளியேற்றத்தால் நாட்டின் சுகாதாரத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்; இது பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.



