ஆசிய கிறிக்கட் கோப்பை: சிங்கங்கள் அபார வெற்றி

🕔 September 11, 2022

சிய கிறிக்கட் கோப்பை இலங்கை வென்றுள்ளது. பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த வெற்றியை இலங்கை பெற்றுள்ளது.

துபாய் சர்வதேச கிறிக்கட் மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் இலங்கை அணி அபாரமாக ஆடி, இந்த வெற்றியை இலகுவாகப் பெற்றது.

இன்றைய இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான், துடுப்பெடுத்தாட இலங்கையை அழைத்தது.

ஒரு கட்டத்தில், இலங்கை 05 விக்கெட்டுக்கு 58 ரன்களில் ஆடங்கண்டது. எனினும், பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்கவுடன் இணைந்து 58 ரன்களையும், பின்னர் சமிக கருணாரத்னவுடன் ஆட்டமிழக்காமல் 54 ரன்களையும் பெற்றனர்.

சிறப்பான இன்னிங்ஸை விளையாடிய பானுக ராஜபக்ஷ அதிகபட்சமாக 71* (45) ரன்களை எடுத்தார்.

மொத்தமான இன்றைய போட்டியில் இலங்கை அணியினர் 170 ஓட்டங்களை எடுத்தனர். இந்த நிலையில் இலங்கை பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயற்பட்டு பாகிஸ்தானை 147 ரன்களுக்குள் முடக்கினனர்.

இலங்கை தரப்பில் பமோத் மதுஷன் 34 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 27 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இன்றைய வெற்றியுடன் 06வது தடவையாக இலங்கை அணி ஆசிய கிறிக்கட் கோப்பையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்து.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்