ஹிருணிகாவை கைது செய்யுமாறு, ஓய்வு பெறும் நாளில் சட்டமா அதிபர் உத்தரவு

🕔 January 9, 2016

hirunika - 01நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்வதற்கான உத்தரவினை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் வழங்கியுள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து 34 வயதுடைய அமில பிரியங்க அமரசிங்க எனும் நபரை, கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி கடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவை கைது செய்வதற்கான உத்தரவினை சட்டமா அதிபர் வழங்கியுள்ளார்.

சட்டமா அதிபர் யுவன்ஜன் வனசுந்தர விஜேதிலக நேற்று வெள்ளிக்கிழமை தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே, சட்டமா அதிபர் தனது இறுதி உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஒன்றாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவை கைது செய்வதற்கான உத்தரவினை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளார்.

மேற்படி கடத்தலுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவின் வாகனம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் ஹிருணிகாவின் ஆட்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்