மாகாணசபை உறுப்பினர் சுபைர், உலர் உணவு வழங்கி வைப்பு
– றியாஸ் ஆதம் –
வெள்ளத்தினால் ஏறாவூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபைருடைய முயற்சியினால் உலர் உணவுப் பொருட்களை நேற்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
ஏறாவூர் 04ஆம் வட்டாரத்திலுள்ள 150 குடும்பங்களுக்கு மாகாணசபை உறுப்பினர் சுபைர் உலர் உணவுப் பொதிகளை வழங்கினார்.
இந் நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முன்னாள் வலயக் கல்விப்பணிப்பாளர் யூ.எல். ஜெயினுத்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைருடைய முயற்சியினால், வருடாவருடம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு இவ்வாறான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.