கொல்ல முயன்றவரை சந்தித்தார் மைத்திரி

🕔 January 8, 2016
mithiri - 765னாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, படுகொலை செய்வதற்கு முயற்சித்த விடுதலைப் புலிகள் உறுப்பினர் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அமைச்சராக பணியாற்றிய 2006 ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை படுகொலை செய்ய முயற்சித்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவராஜா ஜெனிபன் என்பவர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.

தேசிய உடை அணிந்திருந்த புலிகளின் முன்னாள் உறுப்பினரான சிவராஜா ஜெனிபனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்பின்பொது, ஜெனிபனின் முதுகில் தட்டிய ஜனாதிபதி, அவரின் கைகளை பிடித்து வணக்கம் சொன்னார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜெனிபனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்