மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மனைவி, குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

🕔 September 1, 2022

லேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர், அரசாங்க ஒப்பந்தங்களுக்காக லஞ்சம் பெற்றமை தொடர்பில், அவரை குற்றவாளி என கோலாலம்பூர் மேல் நீதிமன்றம் இன்று வியாழன் தீர்ப்பளித்தது.

அவரின் கணவர் ஊழல் வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோலாலம்பூர் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் ஜைனி மஸ்லான் இந்தத் தீர்ப்பை வழங்கினார். அவர் இதற்கான தண்டனையை அறிவிக்க வேண்டியுள்ளது.

70 வயதான ரோஸ்மா, 2016 மற்றும் 2017 க்கு இடையில் தனது கணவர் ஆட்சியில் இருந்தபோது, அரசாங்கத்திடம் இருந்து 279 மில்லியன் டொலர் சூரிய மின்சக்தி திட்டத்தைப் பெற்றுக் கொள்ள உதவுவதற்காக லஞ்சம் கேட்டு பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், லஞ்சத்தை விட ஐந்து மடங்கு அபராதமும் விதிக்கப்படலாம். இருப்பினும் மேல்முறையீடு காரணமாக தண்டனைக்கு தடை கோரப்படலாம்.

ரோஸ்மா 187.5 மில்லியன் ரிங்கிட் (41.80 மில்லியன் டொலர்) லஞ்சமாக கோரியதாகவும், திட்டத்தை பெற்ற நிறுவனத்தின் அதிகாரியிடமிருந்து 6.5 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றதாகவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

நஜிப்பும் அவரது மனைவியும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம், முன்னாள் பிரதமர் நஜிப் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்கத் தொடங்கினார்.

தொடர்பான செய்தி: மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை: கீழமை நீதிமன்றின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்