
லிட்ரோ எரிவாயுக்கான விலை குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க திங்கட்கிழமை (05) நள்ளிரவு இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிவாயுக்கான விலை குறைந்துள்ள நிலையில், விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.



