தலைப்புச் செய்திகள்

அமைச்சராகிறார் அதாஉல்லா

அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும் இடம் வழங்கப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களின் உத்தியோகபூர்வமற்ற பெயர் பட்டியலையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, சி.பி.ர த்நாயக்க, வஜிர அபேவர்தன, தம்மிக்க பெரேரா, எஸ்.பி. திஸாநாயக்க, ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மனோ கணேசன், ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.