
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினர் எஸ்.எச். ஹிஸாருதீன் நேற்று (19) நடைபெற்ற பிரதேச சபையின் மாதாந்தக் கூட்ட அமர்வில் கலந்து கொன்டு, தனது ‘கன்னி (முதலாவது) உரையை நிகழ்த்தினார்.
அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரம் சார்பான பிரதேச சபை உறுப்பினர் ‘கிதுறு மாஸ்டர்’ என அழைக்கப்படும் ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.கே. முகம்மட் காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், பிரதேச சபை உறுப்பினராக ஆட்டாளைச்சேனை – ஆலங்குளம் கிராமத்திலிருந்து ஹிஜாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை வரலாற்றில் ஆலங்குளத்திலிருந்து பிரதேச சபைக்கு உறுப்பினரொருவர் தெரிவாகியுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
இருந்தபோதிலும், பிரதேச சபைகளின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள காலகட்டத்தில் ஹிஜாருதீன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.



