அமரகீர்த்தி இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள ஜகத் சமரவிக்ரம நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

🕔 May 19, 2022

றைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் இடத்துக்கு நியமிக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த எஸ். ஜகத் சமரவிக்ரம, இன்று (19) நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

கடந்த 09ஆம் திகதி வன்முறையில் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் இடத்துக்கு, பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த எஸ். ஜனத் சமரவிக்ரமவை நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு நேற்று முன்தினம் அறிவித்தது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது.

பொலநறுவை மாவடத்தைச் சேர்ந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள, கடந்த 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி உயிரிழந்தார்.

இதன் காரணமாக அவர் வகித்த நாடாளுமன்ற உறுப்புரிமையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார்.

எனவே இந்த வெற்றிடத்தை நிரப்புமாறு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை வழங்கியது.

இதற்கமைய குறித்த வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக எஸ். ஜகத் சமரவிக்ரம என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தாட்சி அலுவலர் வெளிப்படுத்தியிருந்தார்.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவின் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, எஸ். ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பொலன்நறுவை மாவட்டத்தில் 04 நாடாளு உறுப்பினர்களைப் பெற்றெடுத்தது.

இந்தத் தேர்தலில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 05ஆவது இடத்தைப் பெற்று தோல்லியடைந்த எஸ். ஜகத் சமரவிக்ரம என்பவர், தற்போது அமரகீர்த்தி அத்துக்கோரளவின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்