பிரதமர் அலுவலக மாதாந்தச் செலவுகள் 60 மில்லியன் ரூபாவினால் குறைப்பு

🕔 May 18, 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதமர் அலுவலகத்தினுடைய மாதாந்த சராசரி செலவான 120 மில்லியன் ரூபாவை, 60 மில்லியன் ரூபாவாக குறைத்துள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதம மந்திரி அலுவலகம் சராசரியாக 120 மில்லியன் ரூபாவை மாதாந்தம் செலவு செய்ததாகவும், ஆனால் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றவுடன் மாதாந்த செலவுகளை 60 மில்லியன் ரூபாவாகக் குறைத்ததாகவும் சிரேஷ்ட அதிகாரிகள் ஒருவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார்.

விக்கிரமசிங்க ரணில் இன்னும் பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ இல்லமான அலறி மாளிகைக்குச் செல்லவில்லை. தற்போது அவர் ஃப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை முன்னெடுத்து வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்