கோட்டாவுக்கு ஆதரவளித்த 04 முஸ்லிம் எம்.பிகள், சஜித் பிரேமதாஸவுடன் சந்திப்பு: எதிரணியுடன் இணைந்து பயணிக்கவும் முடிவு

🕔 May 14, 2022

– மப்றூக் –

கோட்டாபய ராஜபக்டஷ அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்துள்ளனர்.

இதன்போது எதிர்க்கட்சியுடன் எதிர்காலத்தில் இணைந்து பயணிப்பதற்கும், தீர்மானங்களுக்கு ஆதரவளிக்கவும் தாம் தயாராக உள்ளமையினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் தாம் தெரிவித்ததாக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.

இதேவேளை, பிரதி சபாநாயகர் தெரிவின்போது எதிர்க்கட்சி பிரேரித்த இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கே தாம் ஆதரவளித்தமையினையும் இதன்போது தாங்கள் நினைவுபடுத்தியதாகவும் தௌபீக் குறிப்பிட்டார்.

மேலும், 20ஆவது திருத்தத்துக்கு தாம் ஆதரவளித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்திருக்கவில்லை என்றும், சினேகபூர்வமாக இந்த சந்திப்பை மேற்கொண்டதாகவும் நாடாளுமுன்ற உறுப்பினர் தௌபீக் மேலும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்