பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து அமைச்சர்களாக நால்வர் நியமனம்

🕔 May 14, 2022

புதிய அமைச்சர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும், எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்