ராஜபக்ஷவினரை ரணில் பாதுகாத்து வருகிறார்: அனுர குமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

🕔 May 12, 2022

ராஜபக்ஷவினரை ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து வருவதாக ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் இவ்வாறான சூழ்ச்சியான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளதாகவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, மக்களால் அங்கீகரிக்கப்படாத, நடுநிலை அற்ற ஒருவரை பிரதமராக நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவிடயம் என பேராயர் கர்தினால் மெல்கம்ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலையில் நாட்டுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களை விடுத்து அரசியல் தீர்மானம் ஒன்றுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பிரதமராக ரணில் நியமிக்கப்படுவதன் ஊடாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் அவர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூறியுள்ளார். 

இதேவேளை, பிரதமராக ரணில் நியமிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்திருக்கிறார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்