நீர்கொழும்பு ஹோட்டல்களில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள், பொலிஸ் நிலையத்துக்கு திருப்பியனுப்பப்பட்டன

🕔 May 12, 2022

ண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நீர்கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களில் கொள்ளையடிக்கப்பட்ட பல பொருட்களை தனிநபர்கள் குழுவொன்று கட்டான பொலிஸ் நிலையத்துக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

நீர்கொழும்பு உள்ளிட்ட சில இடங்களிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, அங்கிருந்த பல பொருட்களை தனிநபர்கள் எடுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியிருந்தன.

மெத்தைகள், ஃபிறீசர்கள், நாற்காலிகள் மற்றும் பல இலத்திரனியல் பொருட்கள் போன்றவை மீளக்கிடைத்த பொருட்களில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீதும், ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி அங்கிருந்த சொத்துக்கள் மற்றும் பொருட்களை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்