
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட அரசியல் தீர்மானங்கள் தொடர்பில் பிரதமர் அதிருப்தி அடைந்துள்ளதை இது காட்டுவதாகவும் டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இளைய அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவைக்கு அழைப்பு விடுத்திருந்த அதேவேளை, நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில, அனுபவமிக்க மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை முக்கிய அமைச்சுக்களுக்கு நியமிக்குமாறு பிரதமர் ராஜபக்ஷ வலியுறுத்தி வந்துள்ளார்.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளாதது தற்போது நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
இருந்தபோதிலும், புதிய அமைச்சர்ககளை அலரி மாளிகையில் பிரதமர் சந்தித்தார்



