தலைப்புச் செய்திகள்

அமைச்சரவை அமைச்சர்களாக 17 பேர் பதவிப் பிரமாணம்: ஹாபிஸ் நசீருக்கு சுற்றுச் சூழல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று (18) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

கொழும்பு – கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் 17 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி, புதிய அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் விவரங்கள் வருமாறு:

  • பொது நிர்வாக, உள்விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – தினேஷ் குணவர்தன
  • கடற்றொழில் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா
  • கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் – ரமேஷ் பத்திரண
  • பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க
  • போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர் – திலும் அமுனுகம
  • நெடுஞ்சாலைகள் அமைச்சர் – கனக ஹேரத்
  • தொழில் அமைச்சர் – விதுர விக்ரமநாயக்க
  • விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் – ஜனக்க வக்கும்புர
  • வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் – ஷெஹான் சேமசிங்க
  • நீர் வழங்கல் அமைச்சர் – மொஹான் பிரியதர்ஷன டி சில்வா
  • வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் – விமலவீர திஸாநாயக்க
  • எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் – காஞ்சன விஜேசேகர
  • விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – தேனுக விதானகமனே
  • ஊடகத்துறை அமைச்சர் – நாலக்க கொடஹேவா
  • சுகாதார அமைச்சர் – பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன
  • சுற்றுச்சூழல் அமைச்சர் – நஷிர் அஹமட்
  • துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் – பிரமித்த பண்டார தென்னக்கோன்