ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை இடுவதற்குத் தடை

🕔 March 31, 2022

– அஹமட் –

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு யாரும் கருத்திட முடியாதவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் Gotabaya Rajapaksa எனும் பேஸ்புக் விருப்புப் பக்கத்தில் இவ்வாறு, கருத்துக்களைப் பதிவு செய்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விருப்புப் பக்கத்தில்  10 லட்சத்து 98 ஆயிரத்து 430 பேர், கோடட்டா பய ராஜபக்ஷவை பின் தொடர்கின்றனர்.

ஏன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை.

அண்மைக்காலமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷின் பேஸ்புக் பக்கத்தில் இடப்படும் பதிவுகளின் கீழ், மோசமான வார்த்தைகளைக் கொண்டு, தரக்குறைவாகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்‌ஷ எனும் பெயரில் இயங்கும் பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்கள் பதிவிடுவதற்கு இதுவரையில் தடைகள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்