இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

🕔 March 30, 2022

லங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் மரணமடைந்தமையை அடுத்து, கடந்த இரண்டு வருடங்களாக அந்தக் கட்சிக்கு தலைவர் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் இன்று (30) காலை கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் ஆரம்பித்தது.

இதன்போதே செந்தில் தொண்டமான் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பிரதமரின் இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் பதவி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆறுமுகன் தொண்டமான் காலமானதை அடுத்து, அவரின் மகனும் கட்சியின் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இதுவரையில் கட்சியை தலைமையேற்று நடத்தி வந்தார்.

Comments