டொலருக்கு நிகரான பெறுமதி: 230 ரூபாவாகக் குறைத்தது மத்திய வங்கி

🕔 March 8, 2022

மெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை உடன் அமுலாகும் வகையில் 230 ரூபாவாகக் குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50, விற்பனைப் பெறுமதி 202.99 ரூபாவாக இருந்தது.

இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலான அசைவுகளைத் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன் அதற்கேற்ப பொருத்தமான கொள்கைத் திருத்தங்களை மேற்கொள்ளும் எனவும் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த பெப்ரவரியில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது கடந்த ஜனவரியில் நிலவிய தொகையை விட 02 சதவீதம் குறைவாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்