பதவி நீக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று சந்திக்கின்றனர்: “எதிர்க்கட்சியில் இணைவீர்களா” எனும் கேள்விக்கு கம்மன்பில பதில்

🕔 March 4, 2022

தவி நீக்கப்பட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இன்று சந்தித்து தமது அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கவுள்ளனர்.

தனது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக கம்மன்பில நேற்று இரவு தெரிவித்திருந்தார்.

இதேவேளை எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில, 11 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் கம்மன்பில நேற்றிரவு தனது அமைச்சுக்குச் சென்று தனது தனிப்பட்ட உடமைகளை எடுத்துச் சென்றார்.

தான் இல்லாமல் அரசாங்கம் சரியான பாதையில் சென்றால், தனக்கு அது மகிழ்ச்சியானது எனவும் அவர் கூறியிருந்தார்.

தாம் ஒருபோதும் பொய் சொல்லவில்லை என்றும், உண்மையை மாத்திரமே கூறுவதாகவும் முன்னாள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வீரவன்சவும் கம்மன்பிலவும் புதன்கிழமை அரசாங்கத்தின் ஏனைய ஒன்பது அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கொள்கை அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: விமல், கம்மன்பில ஆகியோரின் அமைச்சர் பதவிகள் காலி: அரசாங்கத்தை விமர்சித்ததால் வந்த வினை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்