பசில் ராஜபக்ஷ: மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுவிப்பு

🕔 February 28, 2022

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றிலிருந்து, இன்று (28) அவர் விடுவிக்கப்பட்டார்.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, பசில் ராஜபக்டஷவுக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்த வங்கில் இருந்தே, அவரை நீதவான் விடுவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

இம்மாதம் 01ஆம் திகதியும் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒன்றிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றம் – அவரை விடுவித்தது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான 02 கோடியே 94 லட்சம் ரூபா பணத்தில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவின் படம் பொறிக்கப்பட்ட 50 லட்சம் நாட்காட்டிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டமை தொடர்பில், பசில் ராபஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தொடரப்பட்ட வழக்கிலிருந்தே, அவர் கடந்த முதலாம் திகதி விடுவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்