
மின்சக்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கலாநிதி சுசந்த பெரேரா மற்றும் முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க ஆகியோரை தலா 10 லட்சம் ரூபா மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆலோசகர்களாக நியமிக்க இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி இருவரும் கடைசியாக பெற்றுக் கொண்ட மாதாந்தச் சம்பளத்தை கொடுப்பனவாகப் பெறுவார்கள். அத்தோடு போக்குவரத்து வசதி, சாரதி, தொழில்நுட்ப மற்றும் எழுதுவினைஞர்களைக் கொண்ட ஊழியர் தொகுதி, மற்றும் அலுவலக இடம் ஆகியவையும் வழங்கப்படும்.
இலங்கை மின்சார சபையில் முதல் தடவையாக இந்தப் பதவி நிலை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி பெனாண்டோவினால் பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மேற்படி இருவரையும் பணிக்குச் சேர்த்துக் கொள்வதற்கான அனுமதி கடந்த ஜனவரி 24ஆம் திகதி வழங்கப்பட்டது.
புதுப்பிக்கத்தக்க ஓராண்டு ஒப்பந்தத்தில் இந்த இரண்டு அதிகாரிகளும் குறித்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.



