வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் அம்பாறை மாவட்டத்தில் எரிப்பு

🕔 February 4, 2022

– அஹமட் –

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை ஒருவரின் ஆடைச் சுதந்திரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட சம்பவத்தை திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்ட வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் இன்று (04) அம்பாறை மாவட்டத்தில் எரிக்கப்பட்டன.

ஷண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா அணிந்து சென்ற ஆசிரியை தனது முகத்தை முழுவதுமாக மூடிச் சென்றதாக தினக்குரல் பத்திரிகை பொய்யான செய்தியினை வெளியிட்டதாக, இப் பத்திரிகையை எரித்தவர்கள் கூறினர்.

இதேபோன்று வீரகேசரி பத்திரிகையும் நடந்த சம்பவத்தை திரிபுபடுத்தி செய்தி வெளிட்டதோடு, பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியர் பக்க நியாயங்களை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்ததாகவும் பத்திரிகைக்கு எதிராகப் பேசியோர் குறிப்பிட்டிருந்தனர்.

வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகளுக்கு இன்று (04) வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கண்டனம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தொடர்பான செய்தி: வீரகேசரியின் நக்குண்ணித்தனம்; ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை

Comments