முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷ அணியினர் காட்டும் சண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது; நாடாளுமன்றில் பிரதமர் எச்சரிக்கை

🕔 December 12, 2015
Ranil - 096– அஸ்ரப் ஏ. சமத் –

மு
ஸ்லிம்கள் மீது  ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள். இப்போது நாடாளுமன்றத்துக்குள் வைத்து முஸ்லிம்களைத் தாக்குவதற்கு முயற்சிப்பதாகவும், ஆனால், அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வரவு – செலவுத்திட்டத்தில் ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு, இன்று சனிக்கிழமை பிரதம மந்திரி  ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

இதன்போது, ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது, நேற்று வெள்ளிக்கிழமை ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கையில்;

“முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக, ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குவதற்கு வந்தனர்.

கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில்தான் நாடாளுமன்றதுக்கு வெளியில் வைத்து  முஸ்லிம்களை அடித்தீா்கள். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்த பிறகு,  அந்தச் சண்டித்தனத்தை இப்போது, நாடாளுமன்றத்துக்குள் காட்டி, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அடிக்க வருகின்றீா்கள்.

இதனை நாம் அனுமதிக்க முடியாது. சகல கட்சித் தலைவா்களையும் கூட்டி இதற்கு முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்