அமைச்சர் ஹக்கீம், உயர் மட்ட அதிகாரிகளுடன்; ஐந்து மணி நேரம் கலந்துரையாடல்

🕔 December 12, 2015

Hakeem - 0987
நா
ட்டின் சகல மாகாணங்களையும் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் முக்கிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று சனிக்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குடிநீர் விநியோகம் தொடர்பில் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், குடிநீரை சீராக வழங்குவதற்கான தேவைப்பாடுகள் மற்றும் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களுக்கும் நீர் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான செயல் திட்டங்கள் தொடர்பில், இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் ஹக்கீமுக்கும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுக்குமிடையிலான இந்தச் சசந்திப்பு சுமார் ஐந்து மணிநேரம் நீடித்தது.

இக் கலந்துiராயடலில், அமைச்சின் மேலதிக செயலாளர் எல். மங்கலிக்கா, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர்; பொறியியலாளர் கே.ஏ. அன்சார் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பலர் பங்குபற்றினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்