ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்: அடைக்கலநாதன் விளக்கம்

🕔 January 19, 2022

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்கப் பிரடனத்தின் பின்னர் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை நேற்று (18) ஆரம்பித்து, தனது கொள்கை விளக்க உரையை ஜனாதிபதி நிகழ்த்தியிருந்தார்.

இந்த உரையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தே, ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை தாம் நிராகரித்ததாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில், தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு தீர்வு விடயம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்தோடு தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்தும் எவ்வித அறிவிப்பையும் ஜனாதிபதி வழங்கவில்லை” என்றும், இந்நிலையில் குறித்த தேநீர் விருந்துபசார நிகழ்வினை கூட்டமைப்பு புறக்கணித்ததாகவும் கூடட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்: கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்