கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

🕔 January 12, 2022

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர், எச்.டி. கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் சந்ரிக்கா என் விஜயரத்ன பதவி வகித்து வருகின்றார்.

இவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது உபவேந்தராக 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றபோது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் கலந்துகொண்டனர்.

Comments