இந்தியா வழங்கிய ரயில், முதல் பயணத்தை நேற்று காங்கேசன்துறைக்கு ஆரம்பித்தது

🕔 January 10, 2022

– அஷ்ரப் ஏ சமத் –

ந்திய அரசு புதிதாக இலங்கைக்கு கடன் அடிப்படையில் வழங்கிய ‘சுகபோகி’ தொடர் ரயில் வண்டியின் முதலாவது பயணத்தை நேற்று போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் விநோட் யாக்குப்ஆகியோர் நேற்று (09) ஆரம்பித்து வைத்தனர்.

அந்த வகையில் குறித்த ரயில் போக்குவரத்து – தினமும் கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு  நாளாந்த சேவையை ஆரம்பித்துள்ளது. 

இந்த ரயில் வண்டி தினமும் காலை 05.10க்கு பயணத்தை ஆரம்பித்து காங்கேசன்துறையை நண்பகல் 12.17க்கு சென்றடையும். அதன் பின்னா் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 01.15க்கு புறப்பட்டு   இரவு 08.25 மணிக்கு கல்கிசை ரயில் நிலையத்தினை வந்தடையும்.

இலங்கைக்கு புகையிரத பாதைகள் மற்றும் புகையிர இயந்திரங்கள் வழங்கும் திட்டத்துக்கு அமைவாக, இலங்கைக்கு  03.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியும், மேலும் 570 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போக்குவரத்து திட்டத்துக்கு கடன் அடிப்படையில் நிதி உதவியும் இந்தியா வழங்கி வருகின்றது. 

இத்திட்டத்தில் அநுராதபுரம் மாகோ, ஓமந்தை ரயில் பாதைக்கான இரும்புப் பாதையிடல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்காக இந்தியாவுக்கு – போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்