இது ஆசிர்வாதம்: பதவி விலக்கப்பட்டமை குறித்து சுசில் கருத்து

🕔 January 4, 2022

மைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்கியமையானது, தனது எதிர்கால அரசியலுக்கு ஆசீர்வாதமாக அமையும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அவர் பதவி நீக்கப்பட்டமை சம்பந்தமாக இன்று (04) ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இதனைக் கூறினார்.

“நான் பதவி நீக்கப்பட்டதை ஊடகங்கள் மூலமே அறிந்துகொண்டேன். எதற்காகப் பதவி நீக்கப்பட்டேன் என்ற விடயம் கூறப்படவில்லை. ஆனால் ஒருவரைப் பதவியில் நிறுத்தவும் பதவியிலிருந்து நீக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. இது ஒரு பெரிய விடயமல்ல. 2000 ஆம் ஆண்டிலேயே நான் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறேன்”.

“எனக்கென்று தொழில்துறை இருக்கிறது. அதன்படி செயல்படத் தயாராக உள்ளேன். மரக்கறி விலைவாசிகள் அதிகரித்துள்ளமை விவசாய அமைச்சரின் தோல்வியாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மக்களுக்காகவே முன்னிலையானேன். நான் அரசாங்கத்தில் சிரேஷ்ட உறுப்பினர் இல்லாவிட்டாலும், சிரேஷ்ட அரசியல்வாதியாவேன்” என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்: கோட்டா அதிரடி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்