அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்: கோட்டா அதிரடி

🕔 January 4, 2022

ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அதிரடித் தீரமானத்தை மேற்கொண்டுள்ளார்.

கல்விச் சீர்திருத்தம், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சராக, சுசில் பதவி வகித்து வந்தார்.

அரசாங்கத்தின் நடவவடிக்கைகளை, சுசில் பிரேமஜயந்த அண்மைக்காலமாக விமர்சித்து வந்த நிலையில், அவர் பதவி நீக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முன்னைய ஆட்சிக் காலங்களில் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராகப் பதவி வகித்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, தற்போதைய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்வியமைச்சர், விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் மற்றும் சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை அந்தஷ்துள்ள பல அமைச்சர் பதவிகளை சுசில் கடந்த காலங்களில் வகித்துள்ளார்.

Comments