போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது

🕔 December 25, 2021

போதைப்பொருளை கொழும்பிலிருந்து கடத்தி வந்து கல்குடா பிரதேசத்தில் விற்பனை செய்து வந்த, ஓட்டமாவடியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் வாழைச்சேனை – பிறந்துரைச்சேனை 02ம் குறுக்கு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை காகித ஆலை ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார்

இவரிடமிருந்து 30 கிராம் ஐஸ் போதைப் பொருளும் போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 540,000 ரூபா என கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்டளார்.

குறித்த நபரைக் கைது செய்வதற்காக மிக நீண்ட நாட்களாக பாதுகாப்புத் தரப்பினர் இவரைப் பின்தொடர்ந்து வந்ததுடன், திட்டமிடல்களும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இவர் சிக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்