எரிபொருள் விலை; மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கிறது: சாதாரண பெற்றோலுக்கு கடந்த 06 மாதங்களில் 40 ரூபா அதிகரிப்பு

🕔 December 21, 2021

ரிபொருளுக்கான விலையேற்றத்தை நேற்று நள்ளிரவு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இது குறித்து மக்கள் பெரும் கோபத்தையும், அதிருப்தியினையும் வெளிப்படுத்தி வருகின்றமையினை சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் மூலம் காணக் கிடைக்கிறது.

புதிய விலையேற்றத்தின் படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 177 ரூபாவாகும்.

அதேபோல் 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 207 ரூபாவாகும்.

அதேபோல் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 111 ரூபாவில் இருந்து 121 ரூபாவாக உயர்ந்துள்ளது.

மேலும் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும். 144 ரூபாவாக இருந்த இதன் விலையை 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 77 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகும்.

கடந்த ஜுன் மாதமும் எரிபொருளுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. அதன்படி 92 ஒக்டென் பெற்றொலின் விலை 20 ரூபாவினாலும், 95 ஒன்டேன் பெற்றோலின் விலை 23 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன.

அதேவேளை ஓட்டோ டீசல் விலை 07 ரூபாவினாலும், சுப்பர் டீசர் விலை 12 ரூபாவினாலும் அதிகரித்திருந்தன.

அந்த வகையில் கடந்த 06 மாதங்களில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினாலும் பொருட்களுக்கான சடுதியான விலையேற்றத்தினாலும் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேற்படி எரிபொருளுக்கான விலையேற்றமானது, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தமைக்கு ஒப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்