மு.கா. எம்.பி. தௌபீக் வகித்த, தேசிய அமைப்பாளர் பதவி பறிபோனது

🕔 December 13, 2021

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், அவர் கட்சியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தௌபீக் வாக்களித்தமைக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் போன தௌபீக், மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, ஆதரவாக வாக்களித்தார்.

ஏற்கனவே, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு ஆதரவாக வாக்களித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் கட்சியில் வகித்த பதவிகள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்